TNPSC Thervupettagam

சீனாவின் அணு ஆயுதக் குவிப்பு

October 24 , 2023 399 days 225 0
  • சீனாவின் இராணுவ சக்தி பற்றிய பென்டகன் அறிக்கையானது, பெய்ஜிங் தனது அணு ஆயுதங்களை உருவாக்கி வரும் வேகமானது முந்தைய கணிப்புகளை விட விரைவாக உள்ளது என்று கூறுகிறது.
  • சீனா வழக்கமான ஆயுதங்களைப் பயன்படுத்தி புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பை உருவாக்கக் கூடும்.
  • கடந்த ஆண்டின் அறிக்கையானது பெய்ஜிங் தனது அணுசக்தியை விரைவாக நவீன மயமாக்கி வருவதாகவும், 2035 ஆம் ஆண்டிற்குள் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்து 1,500 ஆக உயர்த்தும் என்றும் எச்சரித்தது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 1,000க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களைக் களமிறக்கும் வேகத்தில் பெய்ஜிங் செயல்பட்டு வருவதாக 2023 ஆம் ஆண்டு அறிக்கை கண்டறிந்து உள்ளது.
  • அமெரிக்காவில் செயல்பாட்டு நிலையில் 3,750 அணு ஆயுதங்கள் உள்ளன.
  • 2023 ஆம் ஆண்டிற்கான சீனாவின் இராணுவச் செலவினம் 7.2% உயர்ந்து 1.58 டிரில்லியன் யுவான் அல்லது 216 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்