சீனாவின் இராணுவ சக்தி பற்றிய பென்டகன் அறிக்கையானது, பெய்ஜிங் தனது அணு ஆயுதங்களை உருவாக்கி வரும் வேகமானது முந்தைய கணிப்புகளை விட விரைவாக உள்ளது என்று கூறுகிறது.
சீனா வழக்கமான ஆயுதங்களைப் பயன்படுத்தி புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பை உருவாக்கக் கூடும்.
கடந்த ஆண்டின் அறிக்கையானது பெய்ஜிங் தனது அணுசக்தியை விரைவாக நவீன மயமாக்கி வருவதாகவும், 2035 ஆம் ஆண்டிற்குள் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்து 1,500 ஆக உயர்த்தும் என்றும் எச்சரித்தது.
2030 ஆம் ஆண்டிற்குள் 1,000க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களைக் களமிறக்கும் வேகத்தில் பெய்ஜிங் செயல்பட்டு வருவதாக 2023 ஆம் ஆண்டு அறிக்கை கண்டறிந்து உள்ளது.
அமெரிக்காவில் செயல்பாட்டு நிலையில் 3,750 அணு ஆயுதங்கள் உள்ளன.
2023 ஆம் ஆண்டிற்கான சீனாவின் இராணுவச் செலவினம் 7.2% உயர்ந்து 1.58 டிரில்லியன் யுவான் அல்லது 216 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.