சீன நாட்டின் அறிவியலாளர்கள், ஒளிக்குப் பதிலாக ஒலித்துகள்களை தாக்கும், இது வரை உருவாக்கப்படாத பிரகாசமான சீரொளிக் கற்றையினை உருவாக்கியுள்ளனர்.
இது அதி சக்திவாய்ந்த "ஒலி சார் சீரொளிக் கற்றை" ஆகும்.
ஃபோட்டான்கள் எனப்படும் ஒளித் துகள்களை வெளியிடும் வழக்கமான சீரொளிக் கற்றைக்களை போலல்லாமல், இந்த இயந்திரங்கள் ஃபோனான்கள் எனப்படும் துகள் போன்ற ஒலித் துகள்களை வெளியிடுகின்றன.
இந்த இரண்டு வகைகளின் வெளியீடு ஆனது ஒத்ததாக உள்ள நிலையில், ஒளியிழை சீரொளிக் கற்றைகள் ஃபோட்டான்களை வெளியிடுவது போல, ஒலித் துகள்கள் குறுகிய கற்றைகளில் வெளியிடப் படுகின்றன.
திரவங்கள் வழியாக நகரும் போது ஃபோனான்கள் குறைவாகவே தாக்கத்திற்கு உள்ளாகின்றன என்பதால் திரவம் போன்ற திசுக்களை படமாக்குவதிலும் உள்ளுறுப்பு கண்காணிப்பிலும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
டெராஹெர்ட்ஸ் என்பவை அதிர்வெண் வரம்பில் ஒலியை வெளியிடக் கூடியவை என்பதால், விமான நிலைய ஊடு கதிர் சோதனைகளிலும் இதனை நன்கு பயன்படுத்த இயலும்.