சீனா டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு தனது ஏழாவது குழுவை அனுப்பி உள்ளது.
ஏவு கலமானது சென்ஷூவோ-18 விண்கலத்தையும் அதன் மூன்று பேர் கொண்ட விண்வெளி வீரர் பயணக் குழுவினரையும் சுமந்து சென்று சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.
சென்ஷூவோ-18 விண்கலம் டியாங்காங்கின் ஆர வரைவு வடிவ இணைப்பு பகுதியைச் சந்தித்து அதனுடன் இணைத்தல் ஆகிய பணிகளை நிறைவு செய்தது.
2030 ஆம் ஆண்டிற்குள் விண்வெளி வீரர்களை நிலவிற்கு அனுப்பும் நோக்கில் செயல் படும் பெய்ஜிங்கின் விண்வெளித் திட்டத்தில் இது மிகச் சமீபத்திய விண்வெளித் பயணத்தினைக் குறிக்கிறது.