TNPSC Thervupettagam

சீனாவின் செவ்வாய்த் திட்டம்

April 27 , 2020 1676 days 693 0
  • சீனத் தேசிய விண்வெளி நிர்வாகமானது (CNSA - Chinese National Space Administration) தனது முதலாவது செவ்வாய்த் திட்டத்திற்கு “டியான்வென் 1” என்று பெயரிட்டு உள்ளது.
  • இந்த அறிவிப்பானது சீனாவால் 2016 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் தேசிய விண்வெளி தினமான ஏப்ரல் 24 அன்று வெளியிடப் பட்டுள்ளது. 
  • 1970 ஆம் ஆண்டில் தனது முதலாவது செயற்கைக் கோளான “டோங்பாங்காங்” என்ற செயற்கைக்கோள் செலுத்தப்பட்டதைக் குறிப்பதற்காக தனது தேசிய விண்வெளி தினத்தை சீனா அனுசரிக்கின்றது. 
  • “டியான்வென்” என்றால் சொர்க்கலோகக் கேள்விகள் என்று பொருள்படும்.
  • இதுவரை இந்தியா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை செவ்வாய்க்குச் செயற்கைக் கோள்களைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளன.
  • ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிற்குப் பின்பு செவ்வாய்க் கிரகத்தை அடைந்த உலகின் 4வது நாடு இந்தியா ஆகும்.
  • இந்தியாவின் செவ்வாய்த் திட்டமானது “மங்கல்யான்" என்று பெயரிடப்பட்டு இருந்தது. 
  • இது 2013 ஆம் ஆண்டில் இஸ்ரோவினால் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்