சீனத் தேசிய விண்வெளி நிர்வாகமானது (CNSA - Chinese National Space Administration) தனது முதலாவது செவ்வாய்த் திட்டத்திற்கு “டியான்வென் 1” என்று பெயரிட்டு உள்ளது.
இந்த அறிவிப்பானது சீனாவால் 2016 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் தேசிய விண்வெளி தினமான ஏப்ரல் 24 அன்று வெளியிடப் பட்டுள்ளது.
1970 ஆம் ஆண்டில் தனது முதலாவது செயற்கைக் கோளான “டோங்பாங்காங்” என்ற செயற்கைக்கோள் செலுத்தப்பட்டதைக் குறிப்பதற்காக தனது தேசிய விண்வெளி தினத்தை சீனா அனுசரிக்கின்றது.
“டியான்வென்” என்றால் சொர்க்கலோகக் கேள்விகள் என்று பொருள்படும்.
இதுவரை இந்தியா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை செவ்வாய்க்குச் செயற்கைக் கோள்களைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளன.
ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிற்குப் பின்பு செவ்வாய்க் கிரகத்தை அடைந்த உலகின் 4வது நாடு இந்தியா ஆகும்.
இந்தியாவின் செவ்வாய்த் திட்டமானது “மங்கல்யான்" என்று பெயரிடப்பட்டு இருந்தது.