TNPSC Thervupettagam

சீனாவின் பசுமை இல்ல வாயு உமிழ்வு

May 13 , 2021 1167 days 674 0
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் (OECD – Organization for Economic Co-operation and Development) 37 உறுப்பினர் நாடுகளைக் காட்டிலும் சீன நாடானது அதிகளவு பசுமை இல்ல வாயுக்களை உமிழ்கிறது.
  • இது ரோடியம் குழுமம் எனும் அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
  • 2019 ஆண்டில் உலகின் பசுமை இல்ல வாயுக்களில் 27 சதவீதத்தினை சீனா உருவாக்கி வெளியிட்டது.
  • இதன் மூலம் உலகப் பருவநிலை மாசுபாட்டின் கால் பங்கிற்கு மேல் சீனாவினால் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது.
  • பசுமை இல்ல வாயு மாசுபாட்டில் 11 சதவீதப் பங்குடன் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • உலக பசுமை இல்ல வாயு உமிழ்வில் 6 சதவீதப் பங்குடன் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்