TNPSC Thervupettagam

சீனாவின் பாகிஸ்தானிற்கான இரண்டு தொலை உணர்வு செயற்கைக் கோள்கள்

July 12 , 2018 2327 days 729 0
  • நெடும் பயண 2C ஏவுகலத் தளத்தின் மூலம் பாகிஸ்தானின் PRSS - 1 மற்றும் Pak TES - 1 A ஆகிய இரண்டு தொலை உணர்வு செயற்கைக் கோள்களை ஜியூக்வான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்திலிருந்து சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
  • மொத்தத்தில் இத்திட்டம் நெடும்பயண ஏவுகலத் தொடரின் 279வது திட்டம் ஆகும். சூரிய ஒத்தியக்க சுற்று வட்டப்பாதை (Sun Synchronous orbit) (அ) தாழ் புவி சுற்று வட்டப்பாதையினுள் (Low Earth Orbit) செயற்கைக் கோளை அனுப்புவதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • 1999-ல் மோட்டோரோலாவின் இரிடியம் செயற்கைக் கோள்களை சுற்று வட்டப்பாதைக்கு எடுத்துச் செல்லப்பட்டப் பிறகு ஏறத்தாழ இருபது வருடங்களில் செலுத்தப்பட்ட முதல் சர்வதேச வணிகரீதியான ஒரு திட்டம் இது ஆகும்.
  • PRSS - 1, பாகிஸ்தானுக்கு விற்கப்பட்ட சீனாவின் முதல் ஒளியியல் தொலை உணர்வு செயற்கைக்கோள் ஆகும்.
  • இதனால் இரவு மற்றும் பகல் நேர கண்காணிப்பை செய்து முடிக்க முடியும். மேலும் இது மேகங்கள் நிறைந்த நிலையிலும் காணும் திறனைக் கொண்டுள்ளது.
  • PakTES - 1 A, பாகிஸ்தானின் விண்வெளி நிறுவனம் SUPARCO-ன் பொறியாளர்களினால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அறிவியல் செயற்கைக் கோள் ஆகும். (SUPARCO - Space and Upper Atmosphere Research Commission).
  • இந்த செயற்கைக் கோள்கள் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சீனா-பாகிஸ்தானின் பொருளாதார பெருவழிப்பாதைக்கு (China-Pakistan Economic Corridor CPEC) விண்வெளி தொலை உணர்வு தகவல்களை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்