TNPSC Thervupettagam

சீனாவின் பிறப்பு விகிதம்

January 23 , 2020 1676 days 636 0
  • சீனாவில் பிறப்பு விகிதமானது கடந்த 70 ஆண்டுகளில் மிகக் குறைவாகப் பதிவாகி உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் பிறப்பு விகிதமானது 1,000க்கு 10.48 ஆக இருந்தது. இது 1949 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிகக் குறைவானப் பதிவாகும்.
  • இந்தப் பிறப்பு விகித வீழ்ச்சிக்கு பெரும்பாலும் சீனாவின் “ஒரு குழந்தைக் கொள்கை” காரணமாக இருக்கலாம். இந்தக் கொள்கையானது 1979 ஆம் ஆண்டில் அப்போதைய தலைவர் டெங் சியாவோபிங் ஆட்சியின் போது நடைமுறைக்கு வந்தது.
  • கட்டுப்படுத்தப் படாத மக்கள் தொகை வளர்ச்சியானது பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று கருதப்பட்டது.
  • மக்கள் தொகையைப் பற்றி முறையான ஒரு கோட்பாட்டை முன்மொழிந்த முதலாவது பொருளாதார நிபுணர் தாமஸ் ராபர்ட் மால்த்துஸ் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்