2022 ஆம் ஆண்டில் சீனாவில் 9.56 மில்லியன் மக்கள் பிறந்ததாகவும், 10.41 மில்லியன் மக்கள் இறந்துள்ளதாகவும் சீன அரசாங்கம் கூறியுள்ளது.
1960 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து சீனாவில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகமாக பதிவாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இங்கு பிறப்பு எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் பதிவான 10.6 மில்லியன் என்ற அளவிருந்து குறைந்துள்ளது என்பதோடு, இது தொடர்ந்து ஆறாவது ஆண்டாகவும் குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 1.4118 பில்லியன் ஆக பதிவாகியுள்ள நிலையில் இது 2021 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 850,000 அளவிற்குக் குறைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் 7.52 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2022 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது.
2035 ஆம் ஆண்டளவில், சீனாவில் 400 மில்லியன் மக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிற நிலையில், இது அதன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
ஒப்பிட்டுப் பார்க்கையில் 2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் 1,000 பேருக்கு 11.06 பிறப்புகளும், ஐக்கிய இராச்சியத்தில் 10.08 பிறப்புகளும் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் அதே ஆண்டில் பதிவான பிறப்பு விகிதம் 16.42 ஆகும்.