சீனாவின் மக்கள் தொகை 2023 ஆம் ஆண்டில் மீண்டும் சரிவு
January 21 , 2024 309 days 394 0
சீனாவின் மக்கள்தொகையானது, வீழ்ச்சியடைந்த பிறப்பு விகிதம் மற்றும் COVID-19 பெருந்தொற்று சார்ந்த இறப்புகளின் காரணமாக 2023 ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீழ்ச்சியடைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் சீனாவில் உள்ள மொத்த மக்கள் எண்ணிக்கை 2.75 மில்லியன் குறைந்து 1.409 பில்லியனாக உள்ள நிலையில் இது 2022 ஆம் ஆண்டில் பதிவானதை விட வேகமாக சரிந்துள்ளது.
மாவோ சேதுங் சகாப்தத்தின் பெரும் பஞ்சத்தின் போது, 1961 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சரிவிற்குப் பிறகு இத்தகைய சரிவு பதிவாவது இது முதல் முறையாகும்.
1980 முதல் 2015 ஆம் ஆண்டு வரை அமல்படுத்தப்பட்ட ஒரு குழந்தை கொள்கையின் விளைவாக நாட்டின் பிறப்பு விகிதம் பல தசாப்தங்களாக சரிந்து வருகிறது.
நீண்ட கால அடிப்படையில், சீனாவின் மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டில் 109 மில்லியனாக சுருங்கும்.
இது 2019 ஆம் ஆண்டில் அந்நாட்டு அரசு வெளியிட்ட முந்தைய முன் கணிப்பு சரிவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
2022 ஆம் ஆண்டில் 1,000 பேருக்கு 6.77 ஆக இருந்த சீனாவின் பிறப்பு விகிதம் ஆனது கடந்த ஆண்டு 6.39 ஆக இருந்த நிலையில் இது இதுவரையில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைவான பிறப்பு விகிதம் ஆகும்.
ஜப்பானின் பிறப்பு விகிதம் ஆனது 2022 ஆம் ஆண்டில் 1,000 பேருக்கு 6.3 பிறப்புகள், என்ற நிலையில் தென் கொரியாவின் பிறப்பு விகிதம் 4.9 ஆகும்.
2022 ஆம் ஆண்டில் 1,000 பேருக்கு 7.37 ஆக இருந்த சீனாவின் இறப்பு விகிதம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 1,000 பேருக்கு 7.87 ஆக அதிகரித்துள்ளது.
இது 1974 ஆம் ஆண்டு கலாச்சாரப் புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட அதிகபட்ச இறப்பு விகிதமாகும்.