TNPSC Thervupettagam

சீனாவின் முதல் அதிவேக விமானம்

August 11 , 2018 2170 days 646 0
  • சீனா தனது முதல் அதிநவீன தொழில்நுட்பம்  கொண்ட அதிவேக “அலை ஏறி” (Waverider) விமானம் ஷிங்காங் -2 (Starry sky – 2) என்ற விமானத்தை வெற்றிகரமாக சோனை செய்துள்ளது.
  • “Waverider” வளிமண்டலத்தில் பறக்கக்கூடிய ஒரு விமானம் ஆகும். இது தனது அதிவேகத்தினால் காற்றுடன் உருவாக்கப்படும் அதிர்வலைகளை அதிக வேகத்தில் பறக்க பயன்படுத்தும் ஒரு விமானம் ஆகும்.
  • சமீபத்தில், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை இதே போன்ற சோதனைகளை மேற்கொண்டுள்ளன.
  • இந்த அதிவேக Waverider விமானம் சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்துடன் இணைந்து சீன அரசினால் இயக்கப்படும் விண்வெளி காற்றியக்கவியல் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டதாகும்.
  • இது சாதாரண மற்றும் அணு ஆயுதங்கள் இரண்டையும் சுமக்கக் கூடியதாகும்.
  • இதன் அதிவேகம் மற்றும் கணிக்க இயலா வீச்சினால் சமீபத்திய எந்தவொரு ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புக்குள்ளேயும் ஊடுருவும் திறன் உடையதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்