TNPSC Thervupettagam

சீனாவின் வெய்ஃபாங் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா

April 23 , 2025 17 hrs 0 min 16 0
  • 42வது வெய்ஃபாங் சர்வதேசப் பட்டம் விடும் திருவிழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு குழுவும் பங்கேற்றது.
  • தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் ஆதரவுடன், குளோபல் மீடியா பாக்ஸ் முகமை என்பதைச் சேர்ந்த டீம் ஸ்கைட்டர்ஸ் எனும் தமிழக மாநில அணியானது, மிகவும் ஒரு பிரம்மாண்டமான ஊதப்பட்ட ஜல்லிக்கட்டு காளை உருவம் பதித்த ஒரு பட்டத்தைக் காட்சிப்படுத்தியது.
  • இது மாநிலத்தின் முக்கிய விளையாட்டின் சக்தி, பெருமை மற்றும் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தியது.
  • தமிழ் எழுத்துக்களில் 'தமிழ் வாழ்க' என்ற சொற்கள் பொறிக்கப்பட்ட ஒரு மாபெரும் பட்டம் பறக்க விடப்பட்டது.
  • இந்த நிகழ்வு ஆனது உலகின் மதிப்புமிக்க பட்டம் விடும் திருவிழாவாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • இது சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள வெய்ஃபாங் நகரில் நடைபெற்று வருகிறது.
  • இது 'உலகின் காற்றாடி / பட்ட தலைநகரம்' என்று புகழப்படுகிறது.
  • தற்போது நடைபெற்று வரும் 42வது பட்டத் திருவிழாவானது வெய்ஃபாங் சர்வதேசப் பட்டத் திருவிழா ஒரு வசந்த கால பாரம்பரியமாகும்.
  • இந்தப் பங்கேற்பைத் தொடர்ந்து, மே மாதம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்வதேசப் பட்டத் திருவிழாவில் அதே உருவங்கள் கொண்ட பட்டம் இடம் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்