TNPSC Thervupettagam

சீனாவின் வெளியுறவுக் கொள்கையின் ‘ஐந்து கோட்பாடுகள்’ - 70 ஆண்டுகள்

July 3 , 2024 144 days 238 0
  • தனது வெளியுறவுக் கொள்கை கருத்தாக்கமான அமைதியான சகவாழ்வின் ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனா நினைவு நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
  • இது முதன்முதலில் 1954 ஆம் ஆண்டில் இந்தியாவுடனான ஒரு ஒப்பந்தத்தில் வெளிப் படுத்தப் பட்டது.
  • சீனாவின் ஐந்து கோட்பாடுகள் இந்தியாவில் பஞ்சசீலக் கொள்கை  என்று அழைக்கப் படுகிறது.
  • 1954 ஆம் ஆண்டில், திபெத் தொடர்பாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை தொடங்கி வைத்த போது, ​​சீனப் பிரதமர் சூ என் லாய் அமைதியான சகவாழ்விற்கான ஐந்து கோட்பாடுகளை முன்மொழிந்தார்.
  • திபெத் பிராந்தியத்துடனான வர்த்தகம் மற்றும் தொடர்புகளுக்கான ஒப்பந்தம் என அறியப்படும் பஞ்சசீல ஒப்பந்தம் ஆனது 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதியன்று கையெழுத்தானது.
  • சீன-இந்திய ஒப்பந்தத்திற்கு பிறகு ஓராண்டு கழித்து, இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் நடைபெற்ற முதல் ஆப்பிரிக்க-ஆசிய மாநாட்டில் இந்த ஐந்து கோட்பாடுகள் முக்கியமாக இடம் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்