சீனாவின் வெளியுறவுக் கொள்கையின் ‘ஐந்து கோட்பாடுகள்’ - 70 ஆண்டுகள்
July 3 , 2024 144 days 236 0
தனது வெளியுறவுக் கொள்கை கருத்தாக்கமான அமைதியான சகவாழ்வின் ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனா நினைவு நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
இது முதன்முதலில் 1954 ஆம் ஆண்டில் இந்தியாவுடனான ஒரு ஒப்பந்தத்தில் வெளிப் படுத்தப் பட்டது.
சீனாவின் ஐந்து கோட்பாடுகள் இந்தியாவில் பஞ்சசீலக் கொள்கை என்று அழைக்கப் படுகிறது.
1954 ஆம் ஆண்டில், திபெத் தொடர்பாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை தொடங்கி வைத்த போது, சீனப் பிரதமர் சூ என் லாய் அமைதியான சகவாழ்விற்கான ஐந்து கோட்பாடுகளை முன்மொழிந்தார்.
திபெத் பிராந்தியத்துடனான வர்த்தகம் மற்றும் தொடர்புகளுக்கான ஒப்பந்தம் என அறியப்படும் பஞ்சசீல ஒப்பந்தம் ஆனது 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதியன்று கையெழுத்தானது.
சீன-இந்திய ஒப்பந்தத்திற்கு பிறகு ஓராண்டு கழித்து, இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் நடைபெற்ற முதல் ஆப்பிரிக்க-ஆசிய மாநாட்டில் இந்த ஐந்து கோட்பாடுகள் முக்கியமாக இடம் பெற்றது.