TNPSC Thervupettagam

சீனாவில் இரகசியக் கடற்படைத் தளம் – ரியாம்

July 27 , 2019 1855 days 724 0
  • தாய்லாந்து வளைகுடாவில் உள்ள ஒரு கடற்படைத் தளத்தின் பிரத்தியேகப் பயன்பாட்டிற்குச் சீனாவை அனுமதிக்கும் “இரகசிய ஒப்பந்தம்” ஒன்றில்  சீனா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
  • ரியாம் கடற்படைத் தளம் என்பது தாய்லாந்து வளைகுடா கடற்கரையில் அமைந்துள்ள கம்போடியா கடற்படையால் நிர்வகிக்கப்படும் ஒரு தளமாகும்.

  • சீனா அடுத்த 30 ஆண்டுகளுக்கு தனது இராணுவ வீரர்களை அங்கு நிறுத்தவும், ஆயுதங்களை அங்கு சேமித்து வைக்கவும், போர்க் கப்பல்களை அங்கு நிறுத்தி வைக்கவும் திட்டமிட்டுள்ளது.
  • இது சீனாவின் அயல்நாட்டில் உள்ள 2-வது கடற்படைத் தளமாக விளங்கும். 2017 ஆம் ஆண்டில் டிஜிபவுட்டியில் தனது முதல் கடற்படைத் தளத்தை சீனா திறந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்