சீனாவின் வளர்ந்து வரும் மென்பொருள் சந்தையில் ஆதாயம் திரட்டிட தமது இரண்டாவது தகவல் தொழில்நுட்ப தாழ்வாரத்தை (information Technology Corridor) தென் மேற்கு சீனாவில் உள்ள குயியாங் மாகாணத்தில் இந்தியா ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் விழிப்பாக இருந்த போதிலும் சீனாவின் மென்பொருள் சந்தை நழுவிக் கொண்டே வருகின்றது.
மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான தேசிய அமைப்பு (National Association of Software and Services Companies - NASSCOM) சீனாவில் இரண்டாவது எண்ணியல் கூட்டுறவு வாய்ப்புகளுக்கான மையத்தை (Digital Collaborative opportunities Plaza - SIDCOP) ஏற்படுத்தியுள்ளது.
இது சீனாவின் மிகப்பெரும் சந்தைக்குள் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஊடுருவுதலுக்கான வாய்ப்பினை ஏற்படுத்தும்.
கடந்த டிசம்பர் மாதம், நாஸ்காம் அமைப்பு சீனாவின் துறைமுக நகரமான டாலியன் நகரத்தில் இந்தியாவின் முதல் தகவல் தொழில் நுட்ப மையமான முதல் SIDCOP மையத்தை அங்கு ஏற்படுத்தியது.
டாலியன் தாழ்வாரத்தின் கவனம் இணைய விவகாரங்கள் (Internet of Things - IOT) மீது உள்ள அதே சமயம் குயியாங் தாழ்வாரம் பெருந்தகவல் விவகாரங்கள் (Big Data) மீது கவனம் செலுத்தும்.
இந்தியா சீனாவுடனான இருதரப்பு வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்காக, கடந்த பல ஆண்டுகளாக இந்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் மருந்தியல் நிறுவனங்களுக்கு சீனாவிற்குள்ளேயான சந்தை அனுமதியை சீனாவிடம் கேட்டு வருகின்றது.