சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சுமார் 126 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது, அதே சமயம் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் ஆனது இது 5.9 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும் பதிவு செய்துள்ளது.
சுமார் 600க்கும் மேற்பட்டோர் உயிரைப் பலி வாங்கிய 2014 ஆம் ஆண்டில் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினை அடுத்து, பத்தாண்டுகளுக்குப் பிறகு சீனாவைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.
2008 ஆம் ஆண்டில் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தில் 90,000 பேர் உயிரிழந்தனர்.
1920 ஆம் ஆண்டில் கன்சு மாகாணத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தில் சுமார் 2,30,000 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் 1927 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 41,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
யூரேசிய, இந்திய மற்றும் பசிபிக் கண்டத் தட்டுகள் சந்திக்கும் பகுதியில் சீனா அமைந்திருப்பதால், அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.