சீனா – ஆப்பிரிக்கா ஒத்துழைப்பிற்கான சர்வதேசச் செய்திகள் மன்றம்
September 5 , 2018 2274 days 643 0
சீனா, ஆப்பிரிக்க கண்டத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், பசிக் கொடுமையை எதிர்க்கவும் தொழிற்துறையை வளர்க்கவும் 60 பில்லியன் டாலர்களை நிதிஉதவியாக அளிப்பதாக உறுதியளித்துள்ளது.
இதற்கான அறிவிப்பானது, பீஜிங்கில் நடைபெற்ற 3வது சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பிற்கான மன்ற தொடக்க உரையில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கால் அறிவிக்கப்பட்டது.
FOCAC என்பது சீனா மற்றும் ஆப்பிரிக்காவின் அனைத்து நாடுகளுக்கிடையேயான (எஸ்வாடினி என்ற நாட்டைத் தவிர) அதிகாரப்பூர்வ மன்றமாகும். இது 2000ஆம் ஆண்டு பீஜிங்கில் அமைச்சரவை மாநாடாகத் தொடங்கப்பட்டது. அன்று முதல் இது சீனாவிலும் ஆப்பிரிக்காவிலும் மாறிமாறி மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடந்து வருகிறது.