TNPSC Thervupettagam

சீனா-சிங்கப்பூர் ஒப்பந்தம்

May 5 , 2018 2396 days 682 0
  • சீனாவின் பெரும் லட்சியத்திட்டமான மண்டலம் மற்றும் பாதை வழித்தடத்தினோடு (Belt and Road route) மூன்றாம் நபர் சந்தைகளில் (third-party markets) இரு நாடுகளுடைய நிறுவனங்களிடையே அதிகப்படியான கூட்டிணைவை மேம்படுத்துவதற்காக சீனாவும், சிங்கப்பூரும் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (Memorandum of Understanding-MOU) கையெழுத்திட்டுள்ளன.
  • மண்டலம் மற்றும் பாதை வழித்தட திட்டமானது சீனாவின் பெரும் லட்சிய வளர்ச்சி மேம்பாட்டு உத்தி மற்றும் கட்டமைப்பாகும் (development strategy and framework). ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய நாடுகளோடு தன்னுடைய இணைப்பையும், வர்த்தகத்தையும் மேம்படுத்துவதற்காக இத்திட்டத்தை சீனா துவங்கியுள்ளது,
  • சீன அதிபரான ஜின்பிங்-கினால் (Xi Jinping) 2013-ஆம் ஆண்டு இத்திட்டம் முன்மொழியப்பட்டது.
  • மண்டலம் மற்றும் பாதை வழித்தட திட்டமானது இரு பகுதிகளைக் கொண்டது.
    • பட்டுப் பாதை பொருளாதார மண்டலம் (Silk Road Economic Belt)
    • 21-ஆம் நூற்றாண்டின் கடல்சார் பட்டுப் பாதை (21st Century Maritime Silk Road)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்