TNPSC Thervupettagam

சீனா – நில ஆய்வு செயற்கைக்கோள்

December 25 , 2017 2560 days 862 0
  • சீனா தனது இரண்டாவது நில ஆய்விற்கான செயற்கைக் கோளை (LKW-2) கான்சு மாகாணத்திலிருந்து தொலை உணரும் நடவடிக்கைகளுக்கான சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியுள்ளது.
  • இது கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்திலிருந்து ஏவப்பட்டது.
  • லாங் மார்ச் 2டி (இரு எரிபொருள் நிலையுடைய ராக்கெட்) ராக்கெட் இந்த செயற்கைக் கோளை விண்வெளிக்கு எடுத்து சென்றது.
  • இந்த ஏவுதல் லாங் மார்ச் ராக்கெட் வரிசையின் 259-வது ஏவுதலாகும்.‘
  • சீனாவின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் மூலம் மேம்படுத்தப்பட்ட இந்த LKW-2 ராக்கெட் ராணுவத்தின் ஜியான்பிங்க்-6 வரிசையின் அடிப்படையில் அமைந்த மின் ஒளி ஆராய்ச்சி செயற்கைக்கோள் ஆகும்.
  • யாவோகான் வெய்ஜிங்க்-32 எனவும் அறியப்படும் LKW-2 என்பது நிலத்தினுள் உள்ள வளங்களை கண்டுணர உதவும் தொலையுணர் நடவடிக்கைகளுக்காக பெரிதும் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்