TNPSC Thervupettagam

சீனா, பாகிஸ்தானுடன் காலநிலை சார்ந்த ஒத்துழைப்பு

October 9 , 2019 1877 days 738 0
  • இந்திய வானிலை ஆய்வு நிறுவனமானது (Indian Meterelogical Department  - IMD) சிறந்த முறையிலான “தரவுச் சேகரிப்பின்” மீது கவனம் செலுத்தவும் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு காலநிலை குறித்த முன்னறிவிப்புச் சேவைகளை வழங்கவும் முடிவு செய்துள்ளது.
  • IMD ஆனது இமய மலையை உள்ளடக்கிய இந்துகுஷ் மலைகள் மீதான காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைச் சிறப்பாகக் கையாள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மூன்றாவது துருவம்
  • இந்துகுஷ் இமய மலைப் பகுதியானது (Hindu-Kush-Himalayan - HKH) வட மற்றும் தென் துருவங்களுக்குப் பிறகு மூன்றாவது துருவமாகக் கருதப்படுகின்றது. மேலும் இது காலநிலை மீது குறிப்பிடத்தக்கத் தாக்கங்களைக் கொண்டுள்ளது.
  • இந்த மூன்றாவது துருவமானது பரந்த தாழ் வெப்ப மண்டலங்களைக் கொண்டுள்ளது. இது துருவப் பகுதிக்கு வெளியே இருக்கும் உலகின் மிகப்பெரிய பனி மற்றும் பனிக் கட்டிகளின் சேகரிப்பாகவும் விளங்குகின்றது. இது மிகப்பெரிய 10 ஆறுகளின் மூலாதாரமாகவும் விளங்குகின்றது.
  • எனவே, இது காலநிலை மாற்றத்திற்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது.
  • HKH பகுதியானது பின்வரும் நாடுகளில் பரவியுள்ளது.

ஆப்கானிஸ்தான்

வங்க தேசம்

பூடான்

சீனா

இந்தியா

கிர்கிஸ்தான்

மங்கோலியா

மியான்மர்

நேபாளம்

பாகிஸ்தான்

தஜிகிஸ்தான்

உஸ்பெகிஸ்தான்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்