இந்திய வானிலை ஆய்வு நிறுவனமானது (Indian Meterelogical Department - IMD) சிறந்த முறையிலான “தரவுச் சேகரிப்பின்” மீது கவனம் செலுத்தவும் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு காலநிலை குறித்த முன்னறிவிப்புச் சேவைகளை வழங்கவும் முடிவு செய்துள்ளது.
IMD ஆனது இமய மலையை உள்ளடக்கிய இந்துகுஷ் மலைகள் மீதான காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைச் சிறப்பாகக் கையாள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மூன்றாவது துருவம்
இந்துகுஷ் இமய மலைப் பகுதியானது (Hindu-Kush-Himalayan - HKH) வட மற்றும் தென் துருவங்களுக்குப் பிறகு மூன்றாவது துருவமாகக் கருதப்படுகின்றது. மேலும் இது காலநிலை மீது குறிப்பிடத்தக்கத் தாக்கங்களைக் கொண்டுள்ளது.
இந்த மூன்றாவது துருவமானது பரந்த தாழ் வெப்ப மண்டலங்களைக் கொண்டுள்ளது. இது துருவப் பகுதிக்கு வெளியே இருக்கும் உலகின் மிகப்பெரிய பனி மற்றும் பனிக் கட்டிகளின் சேகரிப்பாகவும் விளங்குகின்றது. இது மிகப்பெரிய 10 ஆறுகளின் மூலாதாரமாகவும் விளங்குகின்றது.
எனவே, இது காலநிலை மாற்றத்திற்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது.