TNPSC Thervupettagam

சீனா மற்றும் பிரிட்டின் ஒத்துழைப்பிற்கான உறுதிமொழி

December 17 , 2017 2566 days 882 0
  • பெங்ஜிங்கின் நாணயத்தின் வெளிநாட்டு பயன்பாட்டிற்கான ஒரு மையமாக லண்டனை பயன்படுத்திட பிரிட்டனும், சீனாவும் உறுதி பூண்டுள்ளன.
  • பிரிட்டன் ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறும் இந்த தருணத்தில் இவ்விரு நாடுகளும் தூய்மையான ஆற்றலிற்கான ஆய்வு மற்றும் வர்த்தக மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைக்க உறுதி பூண்டுள்ளன.
  • இரு தரப்பும் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள சீனாவின் யுவான் நாணயத்தை சர்வதேச அளவில் பயன்படுத்திடவும் யுவான் சார்ந்த வியாபார நடவடிக்கைகளை லண்டனில் மேம்படுத்திடவும் ஒத்துக் கொண்டுள்ளன.
  • இரு தரப்பு அதிகாரிகளும் சீனாவின் “பட்டை மற்றும் சாலை “(Belt and Road Initiative) திட்டத்தில் பிரிட்டினின் பங்கை அதிகரிப்பதற்கான வழிகளை ஆய்வு செய்வதற்கும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
  • இத்திட்டமானது, இரயில் பாதைகள், துறைமுகங்கள் மற்றும் இதர உள்கட்டமைப்புகள் மூலமான வர்த்தகத்தை ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு விரிவாக்கம் செய்யும் பரந்த திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்