TNPSC Thervupettagam

சீன அதிர்ச்சி 2.0

October 3 , 2024 51 days 143 0
  • சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு அமெரிக்கா 100 சதவீத வரி விதித்துள்ளது.
  • அமெரிக்கக் கட்டண உயர்வுகளில் சூரிய மின்கலங்கள் மீது 50 சதவீதமும், எஃகு, அலுமினியம், மின்சார வாகனங்களுக்கான மின் கலங்கள் மற்றும் சில கனிமங்கள் மீது 25 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
  • "சீன அதிர்ச்சி 2.0" ஏற்படக் கூடும் என்ற ஒரு அச்சத்தைத் தூண்டும் வகையில், பலவீனமான உள்நாட்டுத் தேவைகளுக்கு மத்தியில் ஏற்றுமதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொழில்துறைக் கொள்கைகளிலிருந்து சீனாவின் அதீத உற்பத்திகள் உருவாகின்றன.
  • சீனாவில் இருந்து இந்தியா மேற்கொள்ளும் இறக்குமதி வீதம் உலகின் பிற நாடுகளை விட மிக வேகமாக வளர்ந்துள்ளது.
  • 2005-06 ஆம் ஆண்டில் 10.87 பில்லியன் டாலர்களாக இருந்த சீனப் பொருட்களின் இறக்குமதியானது 2015-16 ஆம் ஆண்டில் 61.71 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
  • சீன வணிகங்களுக்குப் பல பொருளாதாரக் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், சீனாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதியானது 2023-24 ஆம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் என்ற சாதனை அளவினைத் தாண்டியது.
  • பெருந்தொற்றிற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடச் செய்கையில், கோவிட் பெருந் தொற்றிற்குப் பிந்தைய காலத்தில் சீனாவின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்தின் கணக்கீடுகளின் படி, உலகளாவிய ஏற்றுமதியில் சீனாவின் பங்கு 1.5 சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளது.
  • அன்றைய அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன், உலக வர்த்தக அமைப்பில் சீனா இணைவதற்கு ஆதரவு அளித்தார்.
  • இது ஏராளமான தொழிலாளர் வளத்தின் ஆதரவுடன், உலகளாவியச் சந்தைகளை ஆதிக்கம் செலுத்திய, மிக மலிவான சீனப் பொருட்களின் உற்பத்திக்கு வழி வகுத்தது,  என்பதோடு இதன் விளைவாக சர்வதேச அளவில் உற்பத்தி சார்ந்த வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட்டது.
  • எனவே, உலக வர்த்தக அமைப்பில் சீனாவின் நுழைவு "சீன அதிர்ச்சி" என்று அறியப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்