TNPSC Thervupettagam

சீன-ஆப்பிரிக்க கூட்டுறவு மன்றம் (FOCAC) 2024

September 15 , 2024 69 days 94 0
  • சீன அரசானது 9வது சீன-ஆப்பிரிக்க கூட்டுறவு  (FOCAC) உச்சி மாநாடானது சீனாவின் பெய்ஜிங் நகரில் நடத்தியது.
  • சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 51 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கினார்.
  • சீன-ஆப்பிரிக்க கூட்டுறவு மன்றம் ஆனது 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இது சீன மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான உத்தி சார் கூட்டாண்மையை முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • FOCAC உச்சி மாநாடு ஆனது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது என்ற நிலையில் சீனா மற்றும் ஒரு ஆப்பிரிக்க நாடு ஆகியவை சுழற்சி முறையில் மாறி மாறி இந்த உச்சி மாநாட்டினை நடத்தி வருகின்றன.
  • FOCAC அமைப்பில் 53 ஆப்பிரிக்க நாடுகள் - எஸ்வதினியைத் தவிர முழுக் கண்டமும் -  அதில் உறுப்பினர்களாக உள்ளன.
  • பெய்ஜிங்கின் "ஒரே சீனா" கொள்கைக்கு எதிராக எஸ்வதினி நாடு தைவானுடன் அரசு முறை உறவுகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்