2018-ஆம் ஆண்டிற்கான சீன கிராண்ட் பிரிக்ஸ் போட்டியானது சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஷாங்காய் சர்வதேச பந்தய சுற்றுப் பாதையில் அண்மையில் நடந்து முடிந்துள்ளது.
சீன கிராண்ட் பிரிக்ஸ் போட்டியானது பார்முலா ஒன் மோட்டார் பந்தயமாகும்.
இப்போட்டியில் ரெட் புல் நிறுவனத்தின் ஓட்டுநரான டேனியல் ரிக்கியார்டோ (Daniel Ricciardo) முதலிடம் பிடித்தார். மேலும் மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஓட்டுநரான வால்டேரி பொட்டாஸ் இரண்டாம் இடத்தையும், பெர்ராரி நிறுவனத்தின் ஓட்டுநரான கிமி ரைக்கோனென் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
இந்தப் பந்தயமானது 2018-ஆம் ஆண்டிற்கான FIA பார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது சுற்றாகும்.
மேலும் இப்பந்தயமானது பார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஓர் சுற்றாக சீன கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் 15வது முறையாக நடத்தப்பட்டுள்ளதை குறிக்கின்றது.