பானாஸ்கந்தா மாவட்டத்திலுள்ள சூய்கம் அருகேயுள்ள நாதாபெட்டில் 39 கோடி ரூபாய் மதிப்பிலான ‘சீமா தர்ஷன்’ அல்லது எல்லையோர சுற்றுலாத் திட்டத்திற்கு குஜராத் முதல்வர் விஜய் ரூபானி முதன்மை ஒப்புதலை அளித்துள்ளார்.
எல்லையோர சுற்றுலாத் திட்டத்திற்கு குஜராத்தின் தனிப்பட்ட முயற்சியின் மூலம் தேசப்பற்றினை அறிவுறுத்துவதே இந்த நடவடிக்கையின் பின் உள்ள முக்கிய நோக்கம் ஆகும்.
வாகா எல்லை மாதிரியில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திட்டம் அருங்காட்சியகம் மற்றும் அணிவகுப்புத் தளத்தைத் கொண்டது. இது 5000 மக்கள் அமரக்கூடிய அளவிலான அரங்காகும்.