TNPSC Thervupettagam

"சீர்திருத்த இல்லங்களாக" சிறைகள்

June 21 , 2023 395 days 220 0
  • உத்தரப் பிரதேச மாநில அரசானது சிறைகளை 'சுதார் கிரஹ்' (சீர்திருத்த இல்லங்கள்) ஆக மாற்ற உள்ளது.
  • மேலும், மாநிலத்தின் புதிய சிறைச்சாலைச் சட்டத்தினை உருவாக்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
  • தற்போது, லக்னோவில் குறைவான பாதுகாப்பு நடவடிக்கை கொண்ட சிறைச் சாலை செயல்பட்டு வருகிறது.
  • சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான விவகாரங்களை உள்ளடக்கிய 1894 ஆம் ஆண்டின் சிறைச்சாலைச் சட்டம் மற்றும் 1900 ஆம் ஆண்டின் கைதிகள் சட்டம் ஆகியன தற்போது நடைமுறையில் உள்ளன.
  • 1894 ஆம் ஆண்டின் சிறைச்சாலைச் சட்டத்தின் ஒரு நோக்கம் என்பது காவலில் உள்ள குற்றவாளிகளின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டினைப் பேணுவதாகும்.
  • 2023 ஆம் ஆண்டு மாதிரி சிறைச்சாலைச் சட்டமானது சமீபத்தில் இந்திய அரசினால் தயாரிக்கப் பட்டு வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்