சீர் மரபினர் சமூகங்கள் மற்றும் சீர் மரபினப் பழங்குடியினருக்கு வழங்கப்படும் தனித்தனிச் சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரே சான்றிதழ் ஆக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது குற்றப் பரம்பரைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ‘சீர் மரபினர்’ பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டனர்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் அவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது.
மாநில அரசு இடஒதுக்கீட்டினைப் பெறும் 68 சமூகங்கள் சீர் மரபினர் சமூகங்களாக வகைப்படுத்தப்பட்டன.
ஆனால் மத்திய அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக, அக்குழுவினர் சீர் மரபினப் பழங்குடியினர் என வகைப்படுத்தப் பட்டனர்.