இந்தியக் கடற்படையின் P8I ரக விமானமானது, அமெரிக்காவின் குவாம் பகுதியில் சீ டிராகன் 23 பயிற்சியில் பங்கேற்றது.
இது நீண்ட தூரக் கடல்சார் உளவு விமானங்களுக்கான மூன்றாவது ஒருங்கிணைந்தப் பலதரப்பு நீர்மூழ்கி எதிர்ப்பு போர் (ASW) பயிற்சியாகும்.
பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சார்ந்த சவால்களுக்கு எதிராக அவற்றின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டினை ஒருங்கிணைப்பதை இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இப்பயிற்சியானது நட்புறவுமிக்க கடற்படைகளுக்கிடையில் உயர் மட்ட இணைதிறன் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றினை அடைவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.