TNPSC Thervupettagam

சீ விஜில் 22 பயிற்சி

November 21 , 2022 609 days 256 0
  • இந்தியா முழுவதுமான கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியான 3வது ‘சீ விஜில் 22’ என்ற பயிற்சியினை இந்தியக் கடற்படை மேற்கொண்டது.
  • சீ விஜில் என்பது 2018 ஆம் ஆண்டில் கருத்தாக்கம் செய்யப் பட்ட தேசிய அளவிலான ஒரு கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியாகும்.
  • கடலோரக் காவல்படை மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிற அமைச்சகங்களின் ஒருங்கிணைப்புடன் சேர்த்து இந்தியக் கடற்படையினால் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது.
  • இந்தப் பயிற்சியானது ‘26/11’ தாக்குதலைத் தொடர்ந்து, கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துகிறது.
  • சீ விஜில் மற்றும் TROPEX ஆகிய இரண்டும் ஒருசேர, கடல்சார் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு சவால்கள் முழுவதையும் எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை உள்ளடக்கும்.
  • போர்க்கள அளவிலான தயார்நிலை செயல்பாட்டுப் பயிற்சி (TROPEX) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒரு இராணுவப் பயிற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்