சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த அறிக்கை
November 21 , 2023 369 days 260 0
இந்த புதிய உலகளாவிய கணிப்புகள் ஆனது சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த லான்செட் கவுண்டவுன்-இன் 8வது வருடாந்திர அறிக்கையின் ஒரு பகுதியாகும்.
இந்த நூற்றாண்டின் இறுதியில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் (தொழில்துறை காலத்திற்கு முந்தைய நிலைகளை விட) அதிகரித்தால், நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் ஆண்டுதோறும் 370% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலைக்கு வெளிப்படுவதன் காரணமாக இந்தியா 219 பில்லியன் டாலர் செயல்திறன் சார்ந்த வருமான இழப்பை சந்தித்தது.
மேலும், 2022 ஆம் ஆண்டில் வெப்ப வெளிப்பாட்டின் (வெயிலில் வேலை செய்தல்) காரணமாக 191 பில்லியன் மதிப்பில் செயல்திறன் மிக்க உழைப்பு நேரம் இழக்கப்பட்ட நிலையில் இது 1991-2000 ஆம் கால கட்டத்தில் இருந்த அளவை விட 54 சதவீதம் அதிகமாகும்.
2022 ஆம் ஆண்டில் 64 சதவிகித செயல்திறன் மிக்க நேர இழப்பும், 5.5 சதவிகித செயல்திறன் மிக்க வருமான இழப்புடன் வேளாண் தொழிலாளர்கள் தான் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில், 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் ஏற்படும் அதிக வெப்பநிலை தொடர்பான இறப்புகள் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.