TNPSC Thervupettagam

சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த லான்செட் கணிப்பு

January 5 , 2024 196 days 195 0
  • 1986-2005 என்ற அடிப்படை ஆண்டின் சராசரியுடன் ஒப்பிடும்போது 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் கோடை காலத்தின் சராசரி வெப்ப நிலையானது 0.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்து, பொது மக்களின் சுகாதாரத்திற்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
  • ஒவ்வொரு வினாடிக்கும் 1,337 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது.
  • 1986-2005 ஆகிய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2013-2022 ஆம் காலக் கட்டம் முதல் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எதிர் கொண்ட மொத்த வெப்ப அலையின் தாக்க நாட்களின் எண்ணிக்கையில் 43% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
  • அதே காலக் கட்டத்தில், 65 வயதுக்கு மேற்பட்ட முதிர் வயதினர் வெப்ப அலையால் பாதிப்புக்குள்ளான நாட்களில் 216% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் மட்டும் 191 பில்லியன் திறன் மிக்க உழைப்பு நேரம் இழக்கப் பட்டுள்ள நிலையில் ,இது 1991-2000 ஆம் ஆண்டிலிருந்த அளவை விட 54% அதிகரித்து உள்ளது.
  • இந்த இழப்பு ஆனது 2022 ஆம் ஆண்டில் சுமார் 219 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வருமான இழப்பிற்கு வழி வகுத்த நிலையில், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.3 சதவீதத்திற்குச் சமம் ஆகும்.
  • வேளாண் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்ததோடு அவர்கள் 64% உழைப்பு மணி நேரங்களை இழந்ததோடு, 55% வருவாய் இழப்பினையும் எதிர்கொண்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்