2016 ஆம் ஆண்டில், சுகாதார அணுகல் மற்றும் தரக்குறியீட்டில் (Healthcare access and quality – HAQ Index) 195 நாடுகளில் இந்தியா 145-வது இடத்தைப் பிடித்து, தன் அண்டை நாடுகளான சீனா, வங்கதேசம், இலங்கை மற்றும் பூடான் ஆகிய நாடுகளை விட பின் தங்கியுள்ளது.
கோவா மற்றும் கேரளா HAQ குறியீட்டில் 2016ஆம் ஆண்டில் உயர்நிலையில் உள்ளன. இரு மாநிலங்களும் 60 புள்ளிகளை விட கூடுதலாகப் பெற்றுள்ளன. அஸ்ஸாம் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகியவை 40 புள்ளிகளுக்கும் கீழாகப் பெற்று குறைவான நிலையைப் பெற்றுள்ளன.
இந்தக் குறியீடானது லான்செட் (Lancet) பத்திரிக்கையால் வெளியிடப்படும் உலகளாவிய நோய்களின் அதிகரிப்பைப் பற்றிய ஆய்வின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ளது. உலகின் மிகப் பழமையான பத்திரிக்கைகளுள் ஒன்றான இது பெரிதும் அறியப்பட்ட சக மதிப்பாய்வு பொது மருத்துவ இதழ் ஆகும்.
இந்த ஆய்வானது, HAQ அறிக்கையைப் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தின் தரம் மற்றும் அணுகலை, மரணத்திற்குக் காரணமான 32 காரணிகளின் அடிப்படையில் அளவிட்டது. இந்த காரணிகள், திறனான மருத்துவ பராமரிப்புடன் தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
முதல் முறையாக, இந்த குறியீடானது, பின்வரும் ஏழு நாடுகளுக்குள்ளேயான பகுதிகளுக்கிடையேயான சுகாதார அணுகலையும் அதன் தரத்தையும் ஆராய்ந்துள்ளது.
ஏழு நாடுகள் :
பிரேசில்
சீனா
இந்தியா
இங்கிலாந்து
ஜப்பான்
மெக்ஸிகோ
அமெரிக்கா
2016ஆம் ஆண்டுக்கான HAQ குறியீட்டில் சுகாதார அணுகல் மற்றும் தரம் ஆகியவற்றில் உயர்ந்த அளவுகளைக் கொண்டுள்ள முதல் ஐந்து நாடுகளாவன: