TNPSC Thervupettagam

சுகாதார உரிமை மசோதா - ராஜஸ்தான்

March 30 , 2023 478 days 263 0
  • சுகாதார உரிமை மசோதாவானது, ராஜஸ்தான் மாநில சட்டசபையில் நிறைவேற்றப் பட்டது.
  • இம்மாதிரியான ஒரு சட்டத்தினை நிறைவேற்றும் முதல் இந்திய மாநிலமாக இது உள்ளது
  • இந்தச் சட்டத்தின்படி, அவசரச் சிகிச்சை பெற வரும் நபருக்கு மருத்துவம் பார்க்க முடியாது என்று எந்தவொரு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளும் அல்லது மருத்துவரும் கூற முடியாது.
  • அவசரச் சிகிச்சையில் விபத்துக்கள், விலங்குகள் அல்லது பாம்பு கடித்தல், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் அல்லது மாநில சுகாதார ஆணையத்தால் வரையறுக்கப் பட்ட அவசரகால சிகிச்சை ஆகியவை அடங்கும்.
  • அத்தகையச் சூழ்நிலையில், ஒரு நோயாளி ஒரு தனியார் மருத்துவமனையில் கூட சிகிச்சை அல்லது நோயறிதலுக்கான முன்பணம் செலுத்தவோ அல்லது முன் கட்டணத் தொகை செலுத்தவோ தேவையில்லை.
  • ஒரு நோயாளி தனது சிகிச்சைக்குப் பணம் செலுத்த முடியாவிட்டால், மாநில அரசு அந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக ஆன செலவைத் திருப்பிச் செலுத்தும்.
  • இதில் நோயாளி எந்த மருந்தகத்தில் மருந்து வாங்க வேண்டும் என்பதையும் அல்லது எந்த ஆய்வகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உரிமையையும் பெறுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்