மாநிலத்தின்43 கோடி குடும்பங்களுக்கு மருத்துவப் பயன்களை வழங்குவதற்காக “ஆரோக்ய கர்நாடகா” (Arogya Karnataka) எனும் சுகாதாரத் திட்டத்தை கர்நாடகா முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டமானது மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் (BPL – Below Poverty Line) மற்றும் வறுமைக் கோட்டிற்கு மேல் (APC – Above Poverty Line) உள்ள இரு வகையைச் சேர்ந்த குடும்பங்களுக்கும் தரம் வாய்ந்த முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சைக்கான சேவைகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் BPL பிரிவைச் சேர்ந்த அனைத்து குடும்பதாரர்களும் அரசு மருத்துவமனைகளில் முழுவதும் இலவசமாக சிகிச்சையைப் பெறலாம். APL பிரிவைச் சார்ந்த குடும்பதாரர்களின் சிகிச்சை செலவில் 30 சதவீதத்தை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும்.