TNPSC Thervupettagam

சுகாதார நலனில் மாறுதல்கள் குறித்த அறிக்கை 2022-23

September 15 , 2024 15 days 84 0
  • கிராமப்புற இந்தியா முழுவதும் உள்ள பொது சுகாதார மையங்களில் (CHCs) சிறப்பு மருத்துவர்களுக்கான பற்றாக்குறையானது சுமார் 80 சதவீதமாக உள்ளது.
  • நாட்டில் சுமார் 1 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை சுகாதார மையங்கள், தோராயமாக 32,000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 6,359 பொது சுகாதார மையங்கள் உள்ளன.
  • கூடுதலாக, 1,340 துணைப் பிரிவு மற்றும் மாவட்ட மருத்துவமனைகள், 714 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் 362 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
  • 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் CHCகளில் இருக்க வேண்டிய 21,964 நிபுணர்களில் 4,413 சிறப்பு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர், அதாவது 17,551 அல்லது 79.9 சதவீதம் பற்றாக்குறை உள்ளது.
  • நாட்டின் 757 மாவட்டங்களில் 5,491 கிராமப்புற CHCகள் உள்ளன.
  • நகர்ப்புறங்களில் உள்ள 868 CHC மையங்களில் உள்ள நிபுணர்களின் இருப்பு சுமார் 56 சதவீதத்துடன் சற்று சிறப்பான அளவிலேயே இருந்தது.
  • நாட்டில் உள்ள 714 மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 33,964 என்ற மொத்த எண்ணிக்கையில் 27,304 மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
  • இதில் சுமார் 20 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.
  • இந்தியாவின் மருத்துவர்-மக்கள் தொகை விகிதம் ஆனது தற்போது உலக சுகாதார அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்ட 1000 மக்கள்தொகைக்கு 1 மருத்துவர் என்ற விகிதத்தை விட அதிகமாக 1:836 என்ற அளவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்