6 மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்கள் (UTs) 100% முழுமையான நோய்த் தடுப்பு நிலையை (FIC) அடைந்துள்ளன என்பதை இது வெளிப்படுத்துகிறது.
17 மாநிலங்கள் 90 சதவீதத்திற்கும் மேல் முழுமையான நோய்த் தடுப்பு நிலையை எட்டி உள்ளன.
இந்திரதனுஷ் என்ற திட்ட முன்னெடுப்பானது பொது நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
குறைந்த அளவு நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கப் பட்டப் பகுதிகளில், வழக்கமான நோய்த் தடுப்பு மருந்தைத் தவற விட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பு மருந்து வழங்குவதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.