கேசட்டா விபோர்க்ஸ்சா எனப்படும் போலந்து செய்தித்தாள் நிறுவனத்திற்கு உலகச் செய்தி வெளியீட்டாளர் சங்கம் என்ற சங்கத்தினால் வழங்கப்படும் சுதந்திரத்தின் தங்க எழுதுகோல் விருதானது வழங்கப்பட்டது.
தற்போது ஸ்பெயினின் சராகோசா நகரில் நடைபெற்று வரும் 2022 ஆம் ஆண்டு உலக செய்தி ஊடக மாநாட்டின் போது இந்த விருதானது அறிவிக்கப்பட்டது.
சுதந்திரத்தின் தங்க எழுதுகோல் விருது என்பது WAN-IFRA அமைப்பின் வருடாந்திர விருதாகும்.
பத்திரிக்கைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களை இது அங்கீகரிக்கிறது.