TNPSC Thervupettagam

சுதந்திரமான இயக்குநர்களை நியமிப்பதற்கான விதிமுறைகள்

October 17 , 2017 2644 days 958 0
  • செபியினால் (SEBI) அமைக்கப்பட்ட பெருநிறுவன நிர்வாகத்திற்கான கோடக் தலைமையிலான குழு சமீபத்தில் இயக்குநர்களை நியமிப்பதற்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
  • சாதாரண பங்குதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திரமான மற்றும் தன்னிச்சையான இயக்குநர்கள் பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் நிர்வாகத்தாலேயே பெருமளவு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • இந்த குழு மிகுதியான அளவில் இயக்குநர்களும், சுதந்திரமான இயக்குநர்களும் வேண்டுமென்றும் அவர்களது சேர்க்கை மற்றும் தேர்விற்கான அடிப்படைத் தகுதிகள் பற்றியும் கூறுகின்றது.
  • மேலும் இக்குழு குறைந்த பட்ச நிர்வாகக் கூட்டங்கள், அக்கூட்டங்களில் பங்கேற்கும் குறைந்தபட்ச வருகைப் பதிவுகள் ஆகியவற்றுக்கான விதிமுறைகள் பற்றியும் கூறுகின்றது.
  • இது தன்னிச்சையான இயக்குநர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் பற்றியும் குறிப்பிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்