சுதந்திரமான இயக்குநர்களை நியமிப்பதற்கான விதிமுறைகள்
October 17 , 2017 2730 days 1026 0
செபியினால் (SEBI) அமைக்கப்பட்ட பெருநிறுவன நிர்வாகத்திற்கான கோடக் தலைமையிலான குழு சமீபத்தில் இயக்குநர்களை நியமிப்பதற்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
சாதாரண பங்குதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திரமான மற்றும் தன்னிச்சையான இயக்குநர்கள் பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் நிர்வாகத்தாலேயே பெருமளவு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்த குழு மிகுதியான அளவில் இயக்குநர்களும், சுதந்திரமான இயக்குநர்களும் வேண்டுமென்றும் அவர்களது சேர்க்கை மற்றும் தேர்விற்கான அடிப்படைத் தகுதிகள் பற்றியும் கூறுகின்றது.
மேலும் இக்குழு குறைந்த பட்ச நிர்வாகக் கூட்டங்கள், அக்கூட்டங்களில் பங்கேற்கும் குறைந்தபட்ச வருகைப் பதிவுகள் ஆகியவற்றுக்கான விதிமுறைகள் பற்றியும் கூறுகின்றது.
இது தன்னிச்சையான இயக்குநர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் பற்றியும் குறிப்பிடுகின்றது.