TNPSC Thervupettagam

சுதந்திர தின அறிவிப்புகள் 2024

August 17 , 2024 98 days 234 0
  • தமிழக முதல்வர் ‘முதல்வர் மருந்தகம்’ (முதலமைச்சரின் மருந்தகம்) திட்டத்தினை அறிவித்தார்.
  • இது இந்த மாநிலத்தில் மானிய விலையில் பொதுப் பெயர் கொண்ட மருந்துகளை குடிமக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
  • 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இருந்து தமிழகத்தில் இது போன்று மொத்தம் 1,000 மருந்தகங்கள் இயக்கப்படும்.
  • ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தினையும் அவர் அறிவித்தார்.
  • இத்திட்டம் ஆனது இராணுவ வீரர்களுக்கு தொழில்களைத் தொடங்குவதற்கு 1 கோடி ரூபாய் வரை கடன் வழங்குகிறது.
  • இந்தக் கடன் உதவியில் 30 சதவீத மூலதன மானியமும் 30 சதவீத வட்டி மானியமும் வழங்கப் படும்.
  • மூத்க்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதினையும் முதல்வர் வழங்கினார்.
  • டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதானது இஸ்ரோ அமைப்பின் அறிவியலாளர் P. வீரமுத்து வேலுக்கு வழங்கப்பட்டது.
  • வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றிய செவிலியர் A. சபீனாவுக்கு தைரியம் மற்றும் துணிச்சலான நடவடிக்கைக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
  • விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ஆனது 20,000 ரூபாயிலிருந்து 21,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
  • தியாகிகளின் குடும்ப ஓய்வூதியமும் 11,000 ரூபாயிலிருந்து 11,500 ரூபாயாக உயர்த்தப் படும்.
  • கட்டபொம்மன், வ.உ.சி மற்றும் மருது சகோதரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ஆனது 10,500 ஆக உயர்த்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்