TNPSC Thervupettagam

சுதந்திர தின விழா விருதுகள் – தமிழ்நாடு

August 17 , 2021 1256 days 744 0
  • தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தைரியம் மிக்க மற்றும் துணிச்சல் மிக்க நிறுவனத்திற்கான கல்பனா சாவ்லா விருதினை P. சண்முகப்பிரியா என்பவருக்கு அவரது மறைவிற்குப் பிறகு வழங்கினார்.
  • மறைந்த டாக்டர் P. சண்முகப் பிரியா மதுரையிலுள்ள அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபு ரிந்து வந்த ஒரு மருத்துவ அலுவலர் ஆவார்.
  • டாக்டர் A.P.J. அப்துல் கலாம் விருதானது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிறந்த பேராசிரியர் டாக்டர் M. லக்சுமணன் என்பவருக்கு வழங்கப்பட்டது.
  • மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும் நூறு வயதை எட்டிய தலைவருமான N. சங்கரய்யா அவர்களுக்கு முதலாவது தகைசால் விருதினை முதல்வர் வழங்கினார்.
  • கிண்டியிலுள்ள அரசு கொரோனா மருத்துவமனையின் இயக்குநர் K. நாராயணசாமி அவர்களுக்கு முதலமைச்சரின் சிறந்த நடைமுறைகளுக்கான விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • மாற்றுத் திறனாளி மாணவர்களின் சுயாதீனமானக் கற்றலை எளிதாக்கியதற்காக பிரசிடென்சி கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
  • ஔவையார் விருதானது சாந்தி துரைசாமி என்பவருக்கு வழங்கப்பட்டது.
  • தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு என்பவருக்கு சிறந்த மாற்றுப் பாலினத்தவர் விருதானது  வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்