சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் மறுபயன்பாட்டுக் கொள்கை
June 4 , 2018 2403 days 696 0
குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி காந்தி நகரில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் மறுபயன்பாட்டுக் கொள்கையை (Reuse of Treated Waste Water Policy) வெளியிட்டுள்ளார்.
குஜராத் மாநில அரசானது மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளிலிருந்து வரக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரின் மறுபயன்பாட்டிற்காக மின்சாரத்தின் மின்சக்தி கட்டமைப்பினை போன்று சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீருக்கும் நீர்-கட்டமைவை (water-grid) உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
இக்கொள்கையானது சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரின் பயன்பாட்டை மேம்படுத்தும் மற்றும் மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை (Sewage Treatment Plants -STP) அமைக்க உதவும்.
நர்மதா நதிநீர் போன்ற நன்னீர் ஆதரங்களின் மீதான மாநிலத்தின் சார்புடைமையை குறைக்க இக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.