TNPSC Thervupettagam

சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் மறுபயன்பாட்டுக் கொள்கை

June 4 , 2018 2238 days 624 0
  • குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி காந்தி நகரில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் மறுபயன்பாட்டுக் கொள்கையை (Reuse of Treated Waste Water Policy) வெளியிட்டுள்ளார்.
  • குஜராத் மாநில அரசானது மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளிலிருந்து வரக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரின் மறுபயன்பாட்டிற்காக மின்சாரத்தின் மின்சக்தி கட்டமைப்பினை போன்று சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீருக்கும் நீர்-கட்டமைவை (water-grid) உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
  • இக்கொள்கையானது சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரின் பயன்பாட்டை மேம்படுத்தும் மற்றும் மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை (Sewage Treatment Plants -STP) அமைக்க உதவும்.
  • நர்மதா நதிநீர் போன்ற நன்னீர் ஆதரங்களின் மீதான மாநிலத்தின் சார்புடைமையை குறைக்க இக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்