சுந்தரவனக் காடுகளில் மேற்கொள்ளப்பட்ட முதல் பறவைகள் கணக்கெடுப்பு
February 19 , 2023
650 days
282
- மேற்கு வங்காள வனத்துறையின் சுந்தரவனப் புலிகள் காப்பகம் (STR) பிரிவால் இந்த முதல் பறவைகள் கணக்கெடுப்பானது ஏற்பாடு செய்யப்பட்டது.
- பறவைகள் கணக்கெடுப்பானது சுந்தரவனப் பகுதியில் உள்ள பறவை இனங்களின் பன்முகத் தன்மை பற்றிய அடிப்படைத் தரவை வழங்குகிறது.
- முதல் பறவைகள் கணக்கெடுப்பின் போது, சுமார் 145 வெவ்வேறு பறவை இனங்கள் கணக்கிடப் பட்டன.
- முதல் பறவைகள் கணக்கெடுப்பின் போது பதிவு செய்யப்பட்ட இனங்களில் 78 வனப் பறவைகள் மற்றும் 42 வகையான கரைப் பறவைகள், பருந்து வகைப் பறவைகள் போன்றவை அடங்கும்.
- இந்த கணக்கெடுப்பின் போது கணக்கிடப்பட்ட மொத்தப் பறவைகளின் எண்ணிக்கை 5,065 ஆகும்.
- சுந்தரவனக் காடுகளானது வங்காள விரிகுடாவில் கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா நதிகளின் கழிமுகப் பகுதியில் அமைந்துள்ளது.
Post Views:
282