TNPSC Thervupettagam

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி

November 25 , 2017 2585 days 984 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority) மற்றும் பெருங்கடல் தகவல் சேவைக்கான ஆராய்ச்சி மையம் (INCOIS- Indian National Centre For Ocean Information Services) போன்றவற்றின் மூலமாக சுனாமி முன்னெச்சரிக்கையின் தயார்நிலைக்கான ஒத்திகை பயிற்சிகளை பல்வேறு மாநிலங்களில் மேற்கொண்டது.
  • நாட்டின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள் முழுவதும் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சிகளை மேற்கொள்வது இதுவே முதன் முறையாகும்.
  • கிழக்கு கடற்கரை முழுவதும் அதாவது மேற்கு வங்கம், ஒடிஸா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகியவற்றின் 31 கடலோர மாவட்டங்களில் ஒரே நேரத்தில் இந்த ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
  • நவம்பர் 5-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட  2-வது உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தன்று  மேற்கொள்வதற்காக  திட்டமிடப்பட்ட பல்வேறு செயல்பாடுகளின்   ஒரு பகுதியாக இந்த  ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்