TNPSC Thervupettagam
June 12 , 2021 1135 days 543 0
  • 36 வயதான இந்தியக் கால்பந்து வீரர் சுனில் சேத்ரி அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸியை முந்தியுள்ளார்.
  • 74 கோல்களை அடித்து சர்வதேச நடப்பு வீரர்கள் வரிசையில் இவர் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.
  • சேத்ரி தற்போது பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரான மெஸ்ஸியை 2 கோல்கள் என்ற கணக்கில் முந்தியிருக்கிறார்.
  • 73 கோல்கள் அடித்து மூன்றாமிடத்தில் உள்ள  ஐக்கிய அரபு அமீரகத்தின் அலி மப்கௌத் என்பவருக்கு முந்தைய இடத்திற்கு (இரண்டாமிடத்தில்) சேத்ரி முன்னேறி உள்ளார்.
  • வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் இவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
  • சுனில் சேத்ரி கேப்டன் பென்டாஸ்டிக் (Captain Fantastic) எனவும் அழைக்கப் படுகிறார்.
  • சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த நடப்பு வீரர்கள் என்ற பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை அடுத்து  சேத்ரி இரண்டாமிடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்