தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனமானது (National Anti-Doping Agency - NADA) பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியை தனது நிறுவனத் தூதராகத் தேர்வு செய்துள்ளது.
NADA என்பது இந்தியாவின் ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனமாகும்.
இது ஊக்க மருந்து எதிர்ப்பு குறித்த ஆராய்ச்சி மற்றும் கல்வியை ஊக்குவிக்கின்றது. அத்துடன் இது உலக ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனத்தையும் சேர்த்து (World Anti-Doping Agency - WADA) மற்ற ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகின்றது.